MARC காட்சி

Back
லார்ட் வில்லியம் பெண்டின்க் (Lord William Bentinck)
000 : nam a22 7a 4500
008 : 181113b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a ஹென்றி வில்லியம் பிகர்ஸ்கில் (H.W. Pickersgill. R.A. )
245 : _ _ |a லார்ட் வில்லியம் பெண்டின்க் (Lord William Bentinck) |b1 : |b2 =
300 : _ _ |a நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம்
500 : _ _ |a

ஹென்றி வில்லியம் பிகர்ஸ்கில் (H.W. Pickersgill. R.A.) (3 December 1782 – 21 April 1875)

          லண்டனில் பிறந்த ஒரு சிறந்த ஆங்கிலேய உருவப்பட ஓவியர் ஆவார். ராயல் அகாடமியில் ஐம்பது ஆண்டுகள் இருந்தார். மேலும் இவரது ஆரம்ப கால படைப்புக்களில் இயற்கைக்காட்சிகள் மற்றும் வரலாற்றுத் தொடர்புடையவைகளை உருவாக்கி வந்தார். ஆனால் அவர் இறுதியாக உருவப்படம் வரைவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். ராயல் அகாடமியில் அவரது முதல் கண்காட்சி வைக்கப்பட்ட்து. தொடர்ந்து வாழ்நாளில் அவர் மொத்தம் 384 ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தினார். அவர்  நவம்பர் 1822 இல் ராயல் அகாடெமியில் இணை உறுப்பினராவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி 1826 இல் முதல் முழு உறுப்பினராகவும் இருந்தார்.

          பிகர்ஸ்கில் அவரது காலத்தில் உருவப்படம் வரைவதில் பிரபலமாக இருந்தார். இவர் படம் வரைவதற்கு மாதிரிக்காக பலர் அமர்ந்துள்ளனர். அவர்களில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) , ஜார்ஜ் ஸ்டீபன்சன் (George Stephenson) , ஜெர்மி பெந்தம் (Jeremy Bentham), எலிசபெத் பாரெட் பிரவுனிங் (Elizabeth Barrett Browning, டியூக் ஆஃப் வெலிங்டன் (Duke of Wellington) மற்றும் ஃபாரடே (Faraday )போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். இவர் 1816 ஆம் ஆண்டில் எழுத்தாளர் ஜேம்ஸ் சில்க் புக்கிங்ஹாம் மற்றும் அவரது மனைவி எலிசபெத் ஆகியோரை அரபு உடைகளில் வரைந்து பிரபலமானார்.

          லண்டனில் உள்ள தேசிய உருவ ஓவியக் காட்சியகம் தனது சேகரிப்பில் 50 க்கும் மேற்பட்ட இவரது ஓவியங்களைக் வைத்துள்ளது. இதில் 16 எண்ணெய் வண்ண ஓவியங்களும் 35 கீரல் ஓவியங்களும், பிறர் இவரை வரைந்த ஓவியங்களும் உள்ளன. அவர் ராயல் அகாடமியின் 1856-64 முதல் நூலகராக இருந்தார். பின்னர் டிசம்பர் 1872 இல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று தனது 93 வயதில் லண்டனில் உள்ள பிளண்ட்ஃபோர்ட் சதுக்கத்தில் தனது வீட்டில் உயிர் துறந்தார்.

லார்ட் வில்லியம் பெண்டின்க் (Lord William Bentinck) (1774 – 1839 )

வில்லியம் பெண்டின்க், ஒரு பிரிட்டிஷ் வீரரும், அரசியலாளரும் ஆவார். 1828 முதல் 1835 வரை இந்தியாவின் கவர்னராக இருந்தார். பெண்டின்க்,  பிரதமர் வில்லியம் பெண்டின்கின் மற்றும் லேடி டோரதிக்கு, இரண்டாவது மகனாக பக்கிங்ஹாம்ஷையரில் பிறந்தார். இவர் 1803 ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் ஜனவரி 1, 1805 அன்று முதல் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். அவரது ஆட்சிக் காலம் மிதமிஞ்சிய வெற்றி பெற்றாலும், 1806 இல் வேலூர் என்ற இடத்தில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. இந்திய துருப்புகள் தங்களது பாரம்பரிய உடையை அணிய தடை செய்யப்பட வேண்டும் என்று பெண்டின்க் உத்தரவு போட்டார். சில தவறான முடிவுகளை மேற்கொண்டதால் மீண்டும் இங்கிலாந்துக்கே அழைக்கப்பட்டார்.

          பெண்டின்க் 1828 இல் வங்காளத்தின் கவர்னர்-ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அங்கு இருந்த போது கணவரின் இறுதிச்சடங்கில் விதவை மனைவி உயிர் விடும் சதி பழக்கத்தைத் தடுக்க முயற்சி செய்தார். மேலும் பெங்கால் சதி ஒழுங்குமுறைச் சட்டம் 1829 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலும் ராஜா ராம் மோகன் ராய் உதவியுடன் மேற்கத்திய உணர்ச்சிகளை தூண்டும் மற்ற பழக்கங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. சதி, சாதிய இறுக்கம், பலதார மணம் மற்றும் சிறுவயது திருமணம் போன்ற மூடநம்பிக்கை நடைமுறை ஆகியவை களை தடுக்க சட்டத்தை நடைமுறைப்படுத்த ராம்மோகன் ராய்க்கு, லார்ட் பெண்டின்க் பெரிதும் உதவினார்.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
653 : _ _ |a நவீன கால ஓவியம், ஓவியம், ராயல் அகாடமி, தேசியக் கலைக் கூடம், பிரித்தானிய இந்தியா, இங்கிலாந்து, சென்னை, அருங்காட்சியகம், லார்ட் வில்லியம் பெண்டின்க் (Lord William Bentinck), ஹென்றி வில்லியம் பிகர்ஸ்கில் (H.W. Pickersgill. R.A. )
700 : _ _ |a தணிகை மணி
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a சென்னை அருங்காட்சியகம் |b # |c சென்னை |d சென்னை |f சென்னை
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
914 : _ _ |a 13.0713738
915 : _ _ |a 80.2564629
995 : _ _ |a TVA_PNT_00029
barcode : TVA_PNT_00029
book category : நவீனக் கலைகள்
cover :
Primary File :

Sir William Meadows.jpg